சந்திரகுமார் ஆதரவு அதிகாரிகள் தேர்தல் கடமையில் இல்லை!


கிளிநொச்சி மாவட்டத்தில் மு.சந்திரகுமாரிற்கு ஆதரவாக செயல்படுவதாக முடிவெடுத்த அரச அதிகாரிகள் அனைவரதும் தேர்தல் பணியை இரத்துச் செய்யுமாறு கோரி தெரிவத்தாட்சி அலுவலரிடம் சி.சிறீதரன் தரப்பினால் முறையிடப்பட்டுள்ளது.


கிளிநொச்சியில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலருடன் இணைந்து தற்போதும் பணியில் உள்ள அதிகாரிகள் சிலருமாக 2020ஆம் ஆண்டு நடாளுமன்றத்;தேர்தலில் அரசியல் செயல்பாடு குறித்துப்பேசியுள்ளனர்.

தற்போதும் பணியில் உள்ள அதிகாரிகள் சிலரும் இருந்துள்ளதுடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கு விண்ணப்பித்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தில் மு.சந்திரகுமாரிற்கு ஆதரவாக செயல்படுவதாக முடிவெடுத்தோம் எனப் பெயர் கூறப்படும் அத்தனை அரச அதிகாரிகளிற்கும் தேர்தல் கடமை உடனடியாக இரத்துச் செய்யப்படுவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

No comments