தொல்லியல் கட்டடம் இடிப்பு:மகிந்த தரப்பிற்கு தலையிடி!


குருநாகல் புவனேஹ ஹோட்டல் நடத்திச்செல்லப்பட்ட கட்டம் இடிக்கப்பட்டமை தொடர்பிலான இடைக்கால அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (22) வழங்கப்பட்டுள்ளது.


அலரிமாளிகையில் வைத்து குறித்த அறிக்கை முற்பகலில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அறிக்கையில் ஐந்து யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்க திணைக்களங்களில் சரியான தொடர்பாடல் இல்லாமையே குருநாகலில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னனின் அரசமண்டபம் இடிக்கப்பட்டமைக்கு காரணமாகுமென,  ஜெனசெத பெரமுனவின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான ஜீனரத்ன தேரர் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்க திணைக்களங்களில் சரியான தொடர்பாடல் இல்லாமையே குருநாகலில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னனின் அரசமண்டபம் இடிக்கப்பட்டமைக்கு காரணமெனத் தெரிவித்த அவர், அது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் இவ்வாறான விடயங்களில் அரச நிறுவனங்கள் தொடர்பாடலை பேணி இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டுமெனவும் கூறினார்.


No comments