13 இனை தாண்டி தீர்வு:சஜித்?


இதனிடையே ஒருமித்த நாட்டுக்குள் 13 ஆவது அரசியலமைப்பையும் தாண்டி அதிகாரப்பகிர்வை வழங்குவேன் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி ஒன்றிற்கு  பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

நுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்து அதனூடாக நிவாரணங்கள் வழங்கத் தீர்மானித்துள்ளேன்.

அதேபோன்று வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளேன். அனைத்து சந்தர்ப்பங்களிலும் 13ஆவது அரசியலமைப்பைப் பாதுகாத்து செயற்படுவேன். ஒருருமித்த நாட்டுக்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபையும் என்னால் பாதுகாக்கப்படும் என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.

No comments