வழமைக்குத் திரும்புகிறது இங்கிலாந்து! தளர்த்தப்படுகிறது 2 மீற்றர் சமூக இடைவெளி!!

இங்கிலாந்திலில் யூலை 4ஆம் நாள் களியாட்ட விடுதிகள், உணவகங்கள், தங்குமிட விடுதிகள், சிகையலங்கரிப்பு நிலையங்கள், காட்சி அரங்குகள், திரைப்பட அரங்குகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள்  என்பன மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நேரத்தில் 2 மீற்றர் சமூக இடைவெளி தளர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்றைய நிலையில் உட்புற உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் தடாகங்கள், நக அலங்கரிப்பு நிலையங்கள், மற்றும் உட்புற விளையாட்டுத் திடல்கள மூடப்பட்டிருக்கும்.

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மக்கள் 2 மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஆனால் 1 மீ்ற்றர் பிளஸ் விதிமுறை அமுலுக்கு வரும் என்றார்.

ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், வேல்ஸின் முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஆர்லீன் ஃபாஸ்டர் ஆகியோர் 2 மீற்றர் விதிமுறை தங்கள் நாடுகளில் தற்போதைய விதிமுறை அமுலில் இருக்கும் என்றனர்.

No comments