காத்தான்குடியில் தீ! 2 கோடி பெறுமதியான இயந்திரங்கள் நாசம்!

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவுகள் முகாமைத்துவம் செய்யும் திண்மக்கழிவு மீள் சுழற்சி நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளது.

திண்மக்கழிவில் தீ ஏற்பட்டு திண்மக்கழிவு முகாமைத்துவ மீள் சுழற்சி செய்யும் நிலையத்தியத்திலுள்ள இயந்திரங்களிலும் தீப் பிடித்துள்ளது.

பொதுமக்களும் நகரசபை உறுப்பினர்களும் தீயை அணைப்பதற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதேநேரம் மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்ததால் தீ முற்றாக அணைக்கப்பட்டு தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

திண்மக்கழிவு மீள் சுழற்சி இயந்திரங்கள் சில முற்றாக எரிந்துள்ளதுடன் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக எரிந்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மேலும் தெரிவித்தார்.

No comments