தேர்தலின் பின்னரே பரீட்சை?


பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்க எதிர்வரும் புதன் கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு    இன்று அறிவிக்கவுள்ளது.
அவ்வாறு அறிவிக்கப்படும் திகதி குறித்து பரிசீலனை செய்து மேற்குறித்த பரீட்சைகள் நடைபெறும் திகதி தொ யில் குறைவடையாத நிலைமையில் பாடசாலைகளை மீள திறப்பது குறித்தும் பரீட்சைகளை நடத்துவது தொடர்பிலும் இதுவரை தீர்மானிக்கவில்லை என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை மீள திறப்பது குறித்தும் பரீட்சைகளை நடத்துவது தொடர்பிலும் இதுவரை சுகாதார அமைச்சு எந்தவித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய சுற்றுநிரூபம் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த சுற்றுநிரூபத்தை சகல பாடசாலைகளுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments