கைதிகளிற்கும் வாக்களிப்பு உரிமை!


யாழ்ப்பாணம் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த வாக்காளர்கள் இம்முறை மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்தில் வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வலி. வடக்கின் விடுவிக்கப்படாத பகுதி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக இம்முறை மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கலைமகள் வித்தியாலயத்தில் நான்கு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இடம்பெயர்ந்த பகுதி மக்கள் வாக்களிப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
இதனிடையே சிறைகளில் உள்ள கைதிகள் வாக்களப்பது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு இம்முறை விசேட கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

நாடளாவிய ரதீயில் உள்ள சிறைக்களில் சுமார் 7 ஆயிரம் வரையிலானோர் விளக்க மறியல் கைதிகளாவார்.

இந்த விடயத்தில் தற்போதைய சூழலில் விளக்க மறியல் கைதிகளிற்கு வாக்களிக்கும் வாய்ப்பினை வழங்க முடியாது என்றே தேர்தல்கள் ஆணைக்குழு கருதுவதாக தெரியவருகின்றது.

No comments