லிபியாவில் 8 பாரிய மனிதப் புதைகுழிகள்! விசாரணைகளை வலியுறுத்தும் ஐ.நா


லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் தென்கிழக்கில் உள்ள தர்ஹுனா அருகே 8 பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என ஐக்கியா நாடுகள் சபை தனது கீச்சகப் பக்பத்தில் தெரிவித்துள்ளது.

லிபியாவின் கிழக்கே வலிமை மிக்கவராக கருதப்படும் இராணுவத் தளபதி கலீஃபா ஹப்தாருக்கு விசுவாசமான படைகள் தலைநகர் திரிப்போலியிலிருந்து அண்மையில் பின்வாங்கியதை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற அரசாங்கப் படையினர் அப்பகுதிகளைக் கைப்பற்றினர்.

அதன்போது தர்ஹுனா பகுதியில் 8 பாரிய மனிதப் புதைகுழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த சட்டவிரோத மரணங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை அதிகாரிகள் நடத்த வேண்டும் என அனைத்துலக சட்டம் கூறுகிறது என ஐ.நா குறிப்பில் தெரிவித்துள்ளது.


No comments