மிருசுவிலில் செய்தி முகவர் நிறுவனம் மீது தாக்குதல்!


யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியிலுள்ள செய்தி முகவர் நிறுவனமொன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு சுமார் எண்மர் கொண்ட ஆயுதக்குழு வாள்கள் சகிதம் அத்துமீறி உள்நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளது.

இதனால் பல இலட்ச ரூபா பெறுமதியான உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
கனேடிய தொலைக்காட்சி ஒன்றிற்கான செய்திகளை தயார் செய்யும் நிறுவனமே தாக்கப்பட்டுள்ளதுடன் பெறுமதி வாய்ந்த கமராக்களும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த கலையகத்திலிருந்த பணியாளர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே முறைப்பாட்டையடுத்து சுமார் நான்கு மணி நேரத்தின் பின்னரே கொடிகாமம் காவல்துறை வருகை தந்து சேதமடைந்த பொருட்களை உள்ளே எடுத்து வைக்க சொன்னதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே அருகாகவுள்ள மிருசுவில் படைத்தளத்தில் 2000ம் ஆண்டில் நடைபெற்ற படுகொலை தொடர்பான ஆவண படமொன்றை தயாரித்துக்கொண்டிருந்ததாகவும் இதனையடுத்து குறித்த முகாம் படை அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை செய்திருந்ததாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

No comments