காலணியுடன் காவல்துறை:நடவடிக்கைக்கு கோரிக்கை!


நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிசார், கடற்படையினர் நடமாடிய விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் கீரிமலை மெய்கண்டார் ஆதீனம் தவத்திரு உமாபதி சிவம் அடிகளாரினால், முன்னாள் விவசாய பிரதியமைச்சரான அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 

இதனை அடுத்து, இந்த செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு, சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு, அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளாராம்.

இதேவேளை, நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிசார் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments