வாக்கு எண்ணும் பணி 6ம் திகதியே?


இம்முறை ஆகஸ்ட் 5 நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதியே முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடங்களாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை என்பது தேர்தல் நிறைவுற்று சில மணிநேரங்களிலேயே ஆரம்பித்து விடும். ஆனால் இம்முறை அந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இன்று கண்டி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார. அதன் போதே இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 

No comments