தள்ளாடுகின்றது இலங்கை!


இலங்கையில் போதைபொருள் பயன்பாடு கட்டுப்பாடின்றி சென்றுகொண்டிருக்கின்றது.
தென்னிலங்கையில் ஒரே நாளில் பலர் கைதாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 402 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (17) காலை 06 மணிமுதல் இன்று (18) அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்தவர்களே அதிகளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் எண்ணிக்கை 158ஆகும்.
கஞ்சா வைத்திருந்த 95 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கோடா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மற்றையவர்கள் கைதாகியுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments