யாழ்.பல்கலைக்கழக மருத்துபீடத்தில் கொரோனா?


கொரொனோ தொடர்பிலான ஆய்வுகள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.ஆய்வு கூடத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாவென்ற சந்தேகத்தில் ஆய்வுகளை செய்ய விசாரணை அதிகாரிகள் வரும் வரை திருத்த வேலைகளிற்கென ஆய்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒழுங்கற்ற வகையில் பரிசோதனைக்குரிய இரசாயன பொருட்கள் பேணப்பட்டதாகவும் ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட தொற்றுக்கு இது தான் காரணமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணை அதிகாரிகள் வருமுன் தடயங்களை மறைக்க உறை குளிர்பதன பெட்டிகள் அடுத்த அறைக்கு நாளை புதன்கிழமை மாற்றப்படவுள்ளது.நாளை அதற்காக அறைக்கதவுகள் இடித்து அகலமாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கொழும்பில் கொரேனா சமூக தொற்றிகயுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே இன்று மூவர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments