விமான சேவை ரத்து:படகு சேவை ஆரம்பம்!


குவைத்திலிருந்து வந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கட்டாரிலிருந்து இன்று இலங்கை வரவிருந்த விமானம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டினுள் வந்திருப்பதாக அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்த போதும் நேற்றைய தினம் வழமைக்கு மாறாக தொற்றாளர்கள் பெருமளவில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதனிடையே குமுதினிப்படகு மூன்று நாட்கள் நீடித்த ஊரடங்கு சட்டத்தையடுத்து இன்று காலை நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் வரையான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

நெடுந்தீவிற்கான முக்கிய போக்குவரத்து சேவையில் குமுதினி ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments