கொழும்பும் வழமைக்காம்?


ஊரடங்கு தளர்த்தப்படல் சம்மந்தமாக மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

நாளை (26) செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கடைகளில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார விதிமுறைகளை சுகாதார அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்

தொற்று நீக்கி, முகக்கவசங்கள், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் ஆகியவை அடங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments