கொரோனா பீதி:பின்வாங்கியது கோத்தா அரசு!


நாளை திங்கட்கிழமை முதல் இலங்கை இயல்பு வாழ்விற்கு திரும்புவதாக பிரச்சாரம் செய்து வந்திருந்த கோத்தா அரசு இறுதி நேரத்தில் பின்வாங்கியுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கையில் கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்கள் தவிர்ந்த 23 மாவட்டங்களில் மட்டும் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. 

கொழும்பு, ஹம்பகா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு, ஹம்பகா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும், புத்தளம், களுத்துறை மாவட்டங்கள் உள்ளடங்கலாக 23 மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் எனவும் அரசு அறிவித்திருக்கின்றது. 

மேலும் நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை இரவு 8 மணிக்கு மீள அமுலாகும். இவ்வாறே தினசரி 9 மணித்தியாலங்கள் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

No comments