WHO, அமெரிக்க இடையே மீண்டும் மோதல்! கொரோனா வைரஸ் இயற்கையானதே!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோன வைரஸ் ஒரு சீன ஆய்வகத்திலிருந்து  வெளிவந்திருப்பதர்க்கான ஆதாரங்களைக் இருப்பதாக மீண்டும் கூறியதையடுத்து,  கொரோனா வைரஸ் இயற்கையான தோற்றம் கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் வந்திருப்பதாக  விஞ்ஞானிகள் நம்புகின்றனர், கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவில்  வுஹானில் உள்ள ஒரு சந்தையில் இருந்து இறைச்சிக்கான விலங்குகளில் இருந்தே தோன்றியுள்ளதாக கூறுகின்றனர் .

அனால் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜிதான்  உண்மையில் வைரஸ் உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்றது என்பதற்கான ஆதாரங்களை தான் பார்த்ததாக டிரம்ப் கூறியுள்ளபோதிலும் அதற்க்கான ஆதர தகவல்களை  கொடுக்க மறுத்துவிட்டார்.

இந்த அறிக்கை குறித்து  ​​WHO அவசரகாலத் தலைவர் மைக்கேல் ரியான், ஐ.நா. சுகாதார நிறுவனம் வைரஸின் "ஆராட்சிகளில் உள்ள பல விஞ்ஞானிகளுக்கு மீண்டும் மீண்டும் கேட்டது" என்றும், "இந்த வைரஸ் இயற்கையானது என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார், ஐ.நா. நிறுவனம் முன்பு வெளிப்படுத்திய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.

ஏற்க்கனவே இது குறித்தன ஆராட்சிகளில் அமெரிக்காவுக்கும் உலகசுகாதார அமைப்புக்கும் இடையே முறுகல் நிலை உள்ளது, இதன் உச்சக்கட்டமாக சில நாள்களுக்கு முன்பதாக WHOக்கு வழங்கிவந்த நன்கொடை நிதியை அமெரிக்க அதிபர் நிறுத்துவதாக அறிவித்தமை குறிப்பிடத்தகது.

No comments