தடை தாண்டி சுடரேற்றல்?


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார ஆரம்ப நாள் நிகழ்வு செம்மணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்றைய நினைவேந்தலை தடுக்க காவல்துறை மற்றும்; இராணுவத்தினர் முற்பட்டதுடன்  அங்கு குழுமி நிற்க தடை விதித்து விரட்ட முற்பட்டதையடுத்து பதற்றம் ஏற்பட்டது.

ஆயினும் அதனை தாண்டி நினைவேந்தல் சுடர் ஏற்றப்பட்டு செம்மணியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

No comments