கொரோனா வைரஸ் தாக்காது! புதிய தலைக்கவம் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் அமேரிக்காவில் புதிய தலைக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குறித்த தலைக்கவசத்தில் வெளிக்காற்றை சுத்தப்படுத்தி உள்ளே அனுப்பவும், சுவாசிக்கும் காற்றை வெளியேற்றவும் சிறிய மோட்டார் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கண்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளை தொடமுடியாத வகையில் இத் தலைக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட புதிய தலைக்கவசத்திற்கு பயோவைஸர் 1.0 என பெயரிர் சூட்டப்பட்டுள்ளது.

இது கனேடிய ஸ்டார்ட்-அப் விவைசட்ஆர் (Canadian start-up VYZR)  தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டது.

இக்கண்டுபிடிப்பை அடுத்து இதனை மேற்றும் சந்தைக்கு கொண்டுவர மருத்துவர்கள், தாதியர்கள், பல்மருத்துவர்கள் என பலரும் பண உதவி வழங்கி வருகின்றனர். இதுவரை £204,000 கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த தலைக்கசவம் விற்பனைக்கு வரும்போது அதன் விலை £141 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments