கொரோனாவுக்கு பயன்படும் குடை, கேரளாவைத் தொடர்ந்து தமிழகமும்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க  சமூக இடைவெளி அவசியமாகி போயுள்ள நிலையில் கேரளாவில்  குடை மூலம் சமூக விலகல் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு மக்களும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.


அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் குடை நடைமுறையை தமிழக அரசு  நடைமுறைப்படுத்துமா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில், தற்போது ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இந்த நடைமுறையை சிலர் பின்பற்றத் தொடங்கி உள்ள நிலையில், சேலம் ஆட்சியர் S.A.ராமன், சேலத்தில் உள்ள மக்களை சமூக தூரத்தை பராமரிக்க வீடுகளில் இருந்து வெளியே வரும்போது ஒரு குடை பயன்படுத்துவதில் கேரள மக்களை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

No comments