சிங்கப்பூருக்கு ஒருமாத காலம் பூட்டு!

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் சிங்கப்பூரில் வரும் செவ்வாய்கிழமை (7ஆம் தேதி) முதல் ஒரு மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, கொரோனா நெருக்கடியை நாங்கள் பொறுமையாக திட்டமிட்டு எதிர்கொண்டு வருகிறோம். சூழ்நிலைகள் மாறுவதற்கு ஏற்ப எங்கள் நடவடிக்கைகளையும் நாங்கள் மாற்றி வருகிறோம்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருளாதார துறைகளை தவிர்த்து, அனைத்து அலுவலக பணியிடங்களையும் நாங்கள் மூடுகிறோம். உணவகங்கள், சூப்பர் மார்கெட்டுகள், மருத்துவமனைகள், போக்குவரத்து மற்றும் வங்கி சேவைகள் மட்டுமே இனி செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் நாட்களில் கொரோனாவால் ஏற்படும் சூழ்நிலைகளை சமாளிக்க தயாராக உள்ளதாகவும், நாடு தற்போது கட்டுபாட்டிற்குள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments