கோத்தாவின் சமுர்த்தி கடனே:நிவாரணமல்ல!


வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களிற்கு சமுர்த்தி நிவாரணம்
வழங்குவதாக கோத்தா அரசு அறிவித்துள்ள போதும் அது மீள செலுத்தவேண்டிய கடனேயென அம்பலமாகியுள்ளது.

அரசினது கடன் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல் பிரகாரம் சமுர்த்தி முத்திரை பெறும் பயனாளிகளிற்கு மட்டும் அறிமுகப்படுத்திய இடர் கடனாக சஹன பியவர என்ற இக் கடன் காணப்படுகிறது. அத்துடன் ஆறு மாத சலுகைக் காலத்துடன் ஒரு வருடத்தில் கட்டி முடிக்க வேண்டிய கடன் ஆகும். அந்த வகையில் 18 மாத காலத்திற்குள் கட்ட வேண்டும்.

முத்திரை பயனாளிகள் அனைவரும் இக்கடனை பெற முடியாது. ஏனெனில் கட்டாய சேமிப்பில் 12000 ற்கு மேற்பட்ட தொகை இருக்க வேண்டும். எனவே புதிதாக முத்திரைப் பயனாளிகளாக சேர்ந்தவர்களிற்கு இக் கடன் பெறமுடியாது போகலாம். இதற்கு மாற்றீடாக அருணலு கடன் அல்லது நுகர்வுக் கடன் வழங்க முடியும். எனினும் நுகர்வுக் கடனிற்கு வட்டி அறவிடப்படும்.

இக்கடன் மொத்த பெறுமதி 10000.எனினும் 5000. அவர்களின் கரங்களில் சென்றடையும் மிகுதி 5000.அவர்களின் அங்கத்தவர் கணக்கில் வரவு வைக்கப்படும்.

வரவு வைக்கப்பட்ட 5000. இல் குறித்த பயனாளிகளிற்கு உலர் உணவுப் பொதி சதொச , கூட்டுறவுச் சங்கத்தினூடாக கிடைத்தால் அவற்றிற்குரிய பெறுமதி கழித்து குறிப்பிட்ட விற்பனை நிலையங்களிற்கு அனுப்பப்படும். எனவே இத்தகைய பொதிகளை யாரும் இலவசம் என்று நினைக்க வேண்டாம்.

ஒரே நாளில் இக்கடன் எல்லோர் கரங்களிற்கும் சென்றடைய மாட்டாது. ஏனெனில் ஒரு வங்கியில் 2500 ற்கு மேற்பட்ட பயனுகரிகள் இருக்கும் போது எல்லோர்க்கும் ஒரே தடவையில் வழங்குவது கடினம். ஏன தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments