கொரோனர் அரசியல்:கரவெட்டி பிரதேசசபையில்?


பொருளாதார நெருக்கடிகளுள் வாழும் மக்களிற்கு உதவும் வiகையில் கரவெட்டி
பிரதேசசபையின் தவிசாளர் கொண்டுவந்த நிவாரணத்திட்டத்தை சிறீலங்கா சுதந்திர கட்சியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து தோற்கடித்தன என்ற செய்தியை அக்கட்சிகள் மறுதலித்துள்ளன.

கடந்த 28ம் திகதி தவிசாளர் முதல் நாள் தொலைபேசி அழைப்பு மூலம் விசேட கூட்டமொன்றை கூட்டினார். தற்போதைய அவசர நிலை கருதி மக்களுக்கு பிரதேசசபையால் செய்ய கூடியவற்றை செய்ய வேண்டுமென்ற நோக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தவிசாளர் கூட்டத்தின் நோக்கம் பிரதேசசபை மூலம் மக்களுக்கு செய்யகூடிய உதவிகளை செய்வதே என்று கூறினார். அதன் முக்கியத்துவத்தை ஏற்றுகொண்ட அனைவரும் அதற்கு ஒத்துழைப்பதாக கூறினர். இக்கூட்டம் இரு வாரங்களுக்கு முன்பே கூட்டப்பட்டிருக்க வேண்டும் என உறுப்பினர் க.இளங்கோ குறிப்பிட்டார். முதலில் எழுந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் பரஞ்சோதி பிரதேசசபை சட்டத்தின் பிரகாரம் இடர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கமுடியும். எனினும் அதற்கு உள்ளூராட்சி அமைச்சரின் அனுமதி தேவை எனக்குறிப்பிட்டார். ஏற்கனவே வலி கிழக்கு தவிசாளர்; கோரிக்கையை தற்போது உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரத்தை கொண்டுள்ள ஆளுநர் மறுத்திருப்பதை சுட்டிகாட்டிய அவர் சாத்தியமற்ற விடயங்களைவிட உடனடியாக செய்யகூடிய விடயங்களில் கரிசனை செலுத்துமாறு கூறினார். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சிவராசா பரஞ்சோதியின் கருத்தை ஆமோதித்ததுடன் உடனடியாக உதவி செய்வதாயின் களத்தில் நின்று பணியாற்றிகொண்டிருக்கும் கிராம அலுவலகர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூலமாக எமது உதவிகளை மேற்கொள்வதே சரியானவர்களுக்கு உதவி சேர்வதை உறுதிப்படுத்துவதாக இருக்குமென கூறினார். தவிசாளர் தாய் சேய் சுகாதார பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூபா ஆறு இலட்சம் இருப்பதாகவும் அதனை உபயோகிக்கலாம் எனவும் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட அனைத்து உறுப்பினர்களும் ஆகக்குறைந்தது அந்த நிதி மூலம் எவற்றை மக்களுக்கு வாங்கி கொடுக்கலாமோ அவற்றை வாங்கி கொடுக்குமாறு கூறினர்.

மேற்படி விடயம் தொடர்பாக பரப்பப்படும் பொய்கள்.
1. தவிசாளர் ஒரு கோடி நிவாரணத்திட்டம் கொண்டுவந்தார் என்பது பொய்.
2. சிறீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் கூட கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில் அவர்களுடன் இணைந்து முன்னணி நிவாரணத்திட்டத்தை தோற்கடித்தது என்பது முழு பொய்.
3. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சம்மதித்தால் மட்டுமே மக்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என்பது பச்சைபொய்.

31 பேர் கொண்ட சபையில் சுதந்திரகட்சி ஏழு பேரும் வராத நிலையில் முன்னணி ஏழு பேரால் மட்டும் எப்படி ஒரு பிரேரணையை தோற்கடிக்க முடியும்?
கடந்த 30 ஆம் திகதி சபை அனுமதி வழங்கிய ஆறு இலட்சத்தில் இதுவரை என்ன செய்திருக்கின்றீர்கள் என்பதனை தவிசாளர் தெளிவுபடுத்த முடியுமா?
கொரோணாவிலும் உங்கள் கீழ்தர அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என முன்னணி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். 

No comments