அரசியலமைப்பு சபையில் வலியுறுத்தப்பட்ட முக்கிய விடயம்!

கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு தேசிய நெருக்கடி என்றும், அதனைத் தீர்ப்பதற்கு அரசியல் இலாபம் தேடாமல் சகல அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்படுவது அவசியம் எனவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்புப் பேரவை இன்று (23) அதன் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவின் தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியது.

இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள், சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்றங்களை ஆராய்ந்தனர். சுயாதீன ஆணைக்குழுக்களினால், அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள முன்னேற்ற அறிக்கைகளும் இங்கு ஆராயப்பட்டது.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால், அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த இரண்டு கடிதங்களும் இங்கு அவதானத்தில் கொள்ளப்பட்டது.

No comments