கையிருப்பு யாழில் போதிய அளவு உண்டு!


யாழ்ப்பாண மாவட்டத்தில் போதிய உணவுப்பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே தொடரும ஊரடங்கு மத்தியில் வெளி மாவட்டங்களிலிருந்து யாழ் மாவட்டத்திற்கு பொருட்களை எடுத்து வருபவர்களுக்கும் பாஸ் அனுமதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாஸ் அனுமதியைப் பெற்றுக் கொள்கின்ற வர்த்தகர்கள் அதில் மாற்றங்கள் செய்யக் கூடாது என்றும் அந்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தக் கூடாதென்றும் வர்த்தக சங்கத்தின் உப தலைவர் ஆர்.nஐயசேகரன் தெரிவித்துள்ளார். 

கொரோனோ தாக்கத்தால் நாடு மழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு உள்ளது. அத்தோடு இவ் ஊரடங்குச் சட்டம் சில இடங்களில் குறிப்பிட்ட சில மணிநேரங்களாவது தளர்த்தப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் தளர்த்தப்படாமல் தொடர்ந்தும் நடைமுறையிலேயே உள்ளது. ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக வர்த்தகர்கள் அத்தியாவசிய பொருட்களை கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வருவதற்கு பாஸ் அனுமதி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்வதானால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கையை பயன்படுத்தி காவல்துறையிடம் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதியுச்ச சுகாதார நடைமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். பெறப்படும் அனுமதிகளை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அரசாங்கள் அறிவித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றியே செயற்பட வேண்டும். ஏ9 பிரதான வீதியையே பயன்படுத்த வேண்டுமென்றும் இராணுவத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments