பிரித்தானியாவின் முடக்க நிலை மேலும் 3 வாரங்கள் நீடிப்பு!

பிரித்தானியாவின் முடக்க நிலை மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று பிரித்தானியாவின்
வெளியுறவுச் செயலர் டொமினிக் ராப் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில்:-

மதிப்பீட்டு ஆய்வுகளின் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். இன்றைய சூழலில் நாங்கள் முடக்க நிலையை தளர்த்துவது மேலும் சுகாதாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிப்பதாகும்.

கொரோனா தொற்று நோயின் விழுக்காடு இன்றும் குறைவடையவில்லை.

இங்கிலாந்தில் மேலும் 861 கொரோனா வைரஸ் இறப்புகள் மருத்துவமனையில் பதிவாகியுள்ளதால், மொத்தம் 13,729 ஆக உள்ளது.

இப்போது இந்த வைரஸ் தொற்றுநோய்களில் ஒரு நுட்பமான மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம்.

"எங்களிடம் உள்ள நடவடிக்கைகளை தளர்த்த நாங்கள் விரைந்தால், அனைத்து தியாகங்களையும், செய்யப்பட்டுள்ள அனைத்து முயற்சிகளையும் வீணடிக்கும்.

கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதால் இந்த வைரஸ் பிரச்சினை இரண்டாவது தடவையும் பொியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் மீண்டும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சிகள் ஏற்படும்.

வைரஸ் நடவடிக்கைகளுக்கு நாங்கள் விடுத்த கட்டுப்பாடுகளுக்கான  மதிப்பாய்வு அறிக்கை முடிவுக்கு வந்ததுள்ளன. அத்துடன் மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் தொற்று பரவியதற்கான சான்றுகளும் உள்ளன.

முடக்க நிலையைத் தளர்த்தப்படுவதற்கு முன்னர் ஐந்து நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

என்.எச்.எஸ் ஆல் இந்த கொரோன வைரஸ் நிலைமையச் சாமாளிக்க முடியுமான என்பதை உறுதி செய்தல்.

நாளாந்த இறப்பு வீழ்ச்சியடைய வேண்டும்.

நோய்த் தொற்றின் பரவல் குறைந்து வரவேண்டும்.

எதிர்காலத்தில் வைரஸ் சோதனைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.

மாற்றங்களுடனும் நம்பிகையுடனும் இருப்பது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் இந்த அரசாங்கத்தை இன்னும் கடினமாக்குகிறது. ஒரு திட்டவட்டமான காலக்கெடுவை என்னால் வழங்க முடியாது.

நாங்கள்  ஒன்றுபட்டுள்ளோம், இந்த தேசிய முயற்சியை நாம் தொடர வேண்டும் என்றார் ராப்.

No comments