330,000 ஆயிரம் சுவாசக் கவசங்கள் திருட்டு! அமொிக்கா மீது யேர்மனி குற்றச்சாட்டு!

330,000 ஆயிரம் சுவாசக் கவசங்களை அமெரிக்கா திருடிவிட்டது என யேர்மனி பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து யேர்மனியின் உள்துறை அமைச்சர் உள்துறை அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கீசல் தெரிவிக்கையில்:-

சீனாவில் அமைந்துள்ள '3 எம்' என்ற அமெரிக்க நிறுவனத்திடம் 200,000 என் 95 வகை சுவாசக் கவசங்களையும், 130,000 அறுவை சிகிற்சை முகக் கவசங்களையும், 600,000 கையுறைகளையும் கொள்வனவு செய்திருந்தது.

கொள்வனவு செய்த பொருட்கள் அனைத்தும் வானூர்தியில் ஏற்றப்பட்டு சீனாவிலிருந்து தாய்லாந்து வழியாக யேர்மனிக்கு அனுப்பப்பட்டது.

அனுப்பப்பட்ட பொருட்கள் ஒன்றும் வானூர்தியில் வந்து சேரவில்லை. அவை அனைத்தையும் தாய்லாந்தில் தலைநகர் பாக்கொக்கில் வைத்து அமொிக்க அதிகாரிகளால் பறிக்கப்பட்டுள்ளது என யேர்மனி பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்நடடிவக்கை அமொிக்காவின் நடீன திருட்டு எனவும் அனைத்துலக வணிக விதிகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் பின்பற்றவில்லை எனவும் இது கண்டனத்துக்குரியது என யேர்மனி உள்துறை அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கீசல் கருத்து வெளியிட்டுள்ளார்.

அமொிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொற்று நோய்க்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனைக் கட்டுப்படுத்த டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் திணறி வருகின்றது.

இதேநேரம் அமொிக்காவில் சுவாசக் கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் அமொிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய மருத்துவப் பொருட்கள் ஒன்றையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என டிரம்ப் நிர்வாகம் நேற்று சனிக்கிழமை தடை உத்தரவைக் கொண்டுவந்துள்ளது.

இந்நிலையிலேயே யேர்மனிக்கு சீனாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுவாசக் கவசங்கள் மற்றும் கையுறைகளை அமொிக்கா  தாய்லாந்தில் வைத்து பறித்திருந்தது.

No comments