முடங்கியது பிரித்தானியா! வீட்டுக்குள் இருக்குமாறு அறிவிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 335 ஐ எட்டியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைச் தடுப்பதற்கு பிரித்தானியாவில்
புதிய தடைகள் பிரதமரால் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அடிப்படைத் தேவைகளுக்கு வெளியில் செல்வதைத் தவிர்த்து மற்றும்படி வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும்.

குறிப்பாக அத்தியவாசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல், மருத்துவ தேவைகளுக்கு செல்லுதல், தினசரி உடற்பயிற்சிக்கு செல்லுதல், மற்றும் அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகள் முற்றாக மூடப்பட வேண்டும் என்றும் ஒன்றாக வசிக்காத இரண்டுக்கும் மேற்பட்ட மக்கள் பொதுவில் ஒன்றுகூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நண்பர்களை சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மக்கள் விதிகளை பின்பற்றாவிட்டால் அபராதம்  வழங்கவும் சிறைச்சாலைக்கு அனுப்பவும் காவல்துறையினருக்கு  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நூலகங்கள், விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பிற வளாகங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும். ஆனால் பூங்காக்கள் உடற்பயிற்சிக்காக திறந்திருக்கும்.

திருமணங்கள், ஞானஸ்தானம் மற்றும் பிற விழாக்கள் உட்பட அனைத்து சமூக நிகழ்வுகளையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. ஆனால் இறுதி சடங்குகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவுடன் நடைமுறைக்கு வருகின்றது. கட்டுப்பாடுகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும், நாங்கள் மூன்று வாரங்களில் மீண்டும் பார்ப்போம் என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார். தொற்று நோய் குறைவடைந்தால் குறித்த தடைகளைத் தளர்த்துவோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

சுமார் 66 மில்லியன் மக்கள் வசிக்கும் பிரித்தானியாவில் இதுவரை 7,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments