கூட்டச்சொல்கிறார் சுமந்திரன்?


அரசமைப்பின் 70 (7)ஆம் பிரிவின் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையச் சமாளிக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்தை மீண்டும்
கூட்டுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், அழைப்பு விடுத்துள்ளார்.
மாலைதீவு நாடாளுமன்ற அமர்வு காணொளி ஊடாக நடத்தப்பட்டுள்ள நிலையில், இதைப் பின்பற்றலாம் என்று, தனது டுவிட்டர் வலைதளத்தில் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை ஜனநாயக் குடியரசின் அரசமைப்பின் அத்தியாயம் 11 இல், சட்டமன்றத்தின் நடவடிக்கை முறையும் தத்துவங்களும் என்ற பகுதியின் 70ஆவது சரத்தின் 7ஆவது பிரிவில், “நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் எந்த நேரத்திலேனும் நாடாளுமன்றம் குறிப்பிட்ட தினத்துக்கு முன்னராகக் கூட வேண்டுமென்பதை அவசியமாக்குகின்ற அத்தகைய இயல்பினதான நெருக்கடி நிலை ஒன்று எழுந்துள்ளதென ஜனாதிபதி திருப்திப்பட்டால், அவர் கலைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தைப் பிரகடனத்தின் மூலம் அத்தகைய பிரகடனத் திகதியில் இருந்து மூன்று நாள்களுக்கு முற்படாத ஒரு திகதியில் கூடுமாறு அழைக்கலாம் என்பதோடு, அத்தகைய நாடாளுமன்றம் அந்த நெருக்கடி நிலை முடிவுற்றவுடனும், அல்லது பொதுத் தேர்தல் முடிவுற்றவுடனும் இவற்றுள் எது முன்னர் நிகழ்கின்றதோ அது முடிவடைந்தவுடனும் கலைக்கப்பட்டுவிடும்” என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments