நந்தகுமாரை தாக்கியோருக்கு மறியல்

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பரா.நந்தகுமார் மற்றும் அவருடன் சென்ற யாழ்ப்பாணப் பல்கலை்ககழக ஊழியர் சங்கத் தலைவர் மீது தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இரு ஊழியர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (16) பிற்பகல் நல்லூர் றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்திற்கு முன்பாக குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

றியோ பணியாளர்களும் மேலும் சிலரும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments