யேர்மனி சான்சிலருக்கு கை குலுக்க மறுத்த உள்துறை அமைச்சர்

ஜெர்மனியின் சான்ஸ்சிலர் ஏஞ்சலா மெர்கலுகல் உள்துறை அமைச்சர்
ஹொர்ஸ்ட் சிஹொபருக்கு கை குலுக்க கையை நீட்டிய போது, உள்துறை அமைச்சர் கைகுலுக்க மறுத்துவிட்டார். நிலைமையப் புரிந்துகொண்ட மெர்க்கல் சிரித்தபடியே இருக்கை நோக்கிச் சென்று அமர்ந்தார்.

யேர்மனியில் வசித்துவரும் புலம்பெயர் அமைப்புகளுடன் சந்திப்பு ஒன்று தலைநகர் பெர்லினில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சான்ஸ்சிலர் ஏஞ்சலா மெர்கல், உள்துறை அமைச்சர் ஹொர்ஸ்ட் சிஹொபர் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கும்போது அங்கு வந்த சினஸ்சிலர் ஏஞ்சலா மெர்கல் , உள்துறை மந்திரி அமர்ந்திருந்த இருக்கை நோக்கி சென்று மரியாதை நிமித்தமாக கை குலுக்க தனது கையை நீட்டினார். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக உள்துறை அமைச்சர் ஹொர்ஸ்ட் சிஹொபர் பிரதமர் ஏஞ்சலாவுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஏஞ்சலா நிலைமையை புரிந்துகொண்டு அங்கிருந்து சிரித்தபடியே தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையை நோக்கிச் சென்று அமர்ந்தார்.

No comments