மதபோதகர் புண்ணியம்: 4வயது சிறுமியும் வைத்தியசாலையில்?

யாழ்ப்பாணம் - தாவடிப் பகுதியில் இருந்து 4 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்
அடிப்படையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை காலை குறித்த சிறுமி அவசரமாக யாழ்.போதனா வைத்திய சாலை கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சைக்காக கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபருடைய சகோதரியின் மகளே இவ்வாறு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்.வந்த மத போதகருடன் தொடர்பில் இருந்த தாவடிப் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் தாவடிப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த சிறுமி நேற்று வியாழக்கிழமை நண்பகல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் இராணுவம், பொலிஸ் கண்காணிப்பில் குறித்த சிறுமி அம்புலஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments