கொரோனா! பிரித்தானியாவில் மூன்றாவது நபர் பலி!

பிரித்தானியாவில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 60 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மான்செஸ்டர் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 60 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்தவர். இவர் அண்மையில் இத்தாலியில் இத்தாலி சென்று திரும்பியவர் எனக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பிரித்தானியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 273 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகி சிகிற்சை பெற்று வருகின்றனர்.


No comments