தவிக்கும் ஸ்பெயின்; நேட்டோ படைகளின் உதவியை நாடுகிறது!

கொரொனோ வைரஸ் பாதிப்பினால் இறப்பு எண்ணிக்கை 2,700 ஐத் தொட்டுள்ளதோடு, 40,000க்கும் அதிகாமனவர்களுக்கு வைரஸ் பிடித்துள்ளதால்  செய்வதறியாது கதிகலங்கி நிற்கும் ஸ்பெயினின் இராணுவம் நேட்டோ படைகளிடம் உதவி கோரியுள்ளது.

 உலகெங்கிலும் தொற்றுநோய் பரவி வரும் நிலையில் ஸ்பெயின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 514 பேர் இறந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 2,696 ஆக உள்ளது.

 மார்ச் 14 அன்ரிலிருந்து ஸ்பெயின் நாடு முடக்கப்பட்ட போதும் இறப்புகள், தொற்று பரவல் அதிகரித்தவண்ணமே தொடர்ந்து அதிகரித்தவண்ணமே உள்ளது, இந்நிலையிலே சமாளிக்கமுடியாமல் திணறும் ஸ்பெயினின் இராணுவம் தங்களுக்கு உதவுமாறு நேட்டோ படைகளின் உதவியை நாடியுள்ளது.

No comments