14 நாட்டவர்களுக்கு உள்நுழையத் தடை! கொரனோவிலிருந்து பாதுகாக்க கத்தார் அதிரடி!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து பாதுகாத்துகொள்ள  முன்னெச்சரிக்கையாக மார்ச் 9 முதல் 14 நாடுகளில் இருந்து பயணிகளை கத்தார் தற்காலிகமாக தடை செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

 இந்த தடை சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, சிரியா மற்றும் தாய்லாந்தை உள்ளடக்கியது.

கத்தார் ஏர்வேஸ் ஏற்கனவே இத்தாலிக்கு செல்லும் விமானங்களை நிறுத்தியது. கத்தாரில்  ஞாயிற்றுக்கிழமை மேலும் மூன்று வைரஸ் பாதிப்புகளைப் பதிவுசெய்தது, மொத்தம் 15 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments