கொரொனோவில் இருந்து மீண்ட 100 வயது முதியவர்!

100 வயதான சீன மனிதர் ஒருவர் சனிக்கிழமையன்று உலக மக்களை அச்சுறுத்திவரும் கொடிய நோயான கொரொனோ வைரஸ் பிடிப்பிலிருந்து  முழுமையாக குணமடைந்துள்ளார்.

கொரொனோ வைரஸினால் பிடிக்கப்பட்ட மிகவும் வயதான நோயாளி என்று சீன அரசு செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, அவர் பிப்ரவரி 24 அன்று வுஹானில் உள்ள ஹூபேயின் மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் 13 நாட்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சிகிச்சையில் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், பிளாஸ்மா மாற்றங்கள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவம் ஆகியவற்றுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 அந்த வயதானவர் அல்சைமருக்கு ஏற்க்கனவே உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் இருந்தபோதிலும் வைரஸிலிருந்து மீள முடிந்திருந்தது என அந்த செய்தி நிறுவனம் மகிழ்ச்சியானதக பார்க்கிறது.

No comments