இப்போது 99 - இது நம்நாட்டு நிலவரம்

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளான நால்வர் இன்று (26) குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு பின்னர் புதிதாக நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு தொற்று நோய் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 102 ஆக காணப்பட்டது.

அத்துடன் மூவர் குணமடைந்து வெளியேறிய நிலையில் 99 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக குறிப்பிடப்பட்டது.

இதன்படி இன்று குணமடைந்த நால்வருடன் சேர்த்து இதுவரை 7 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக கண்டறியப்பட்ட நால்வருடன் இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 106 ஆகும்.

No comments