சிக்கியது 142 கிலோ கஞ்சா

மன்னார் – கிரஞ்சி பகுதியில் கடற்படை மற்றும் கலால் அலுவலகம் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 142 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு உரிய 8 உரைப்பைகளில் 65 பொதிகளில் இருந்து மொத்தம் 142 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொடர்பான மேலதிக விசாரணைகள் கலால் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

No comments