மின்சார கதிரையில் இருந்து யுத்த குற்றவாளிகளை காப்பாற்றிய ரணில்


யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவ வீரர்களை மின்சார கதிரையில் இருந்து ரணில்தான் காப்பாற்றினார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (17) சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

சர்வதேச ரீதியில் இலங்கையை தனிமைப்படுத்தும் சூழல் மீண்டும் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான நிலைமை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் இறுதிக்காலப்பகுதியில் காணப்பட்டமையினால்தான் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைவிட்டு தப்பியோடினர்.

அதனைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, இராணுவ வீரர்களை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்றினார் – என்றார்.

No comments