ஆரம்பமானது திருக்குறள் மாநாடு?


இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாடு -2020 பன்னாட்டுக் கருத்தரங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கோலாகலமாக இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களும் இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ்த் தாய் அறக்கட்ளையின் ஏற்பாட்டில் உலகத் தமிழாராச்சி நிறுவனம் இந்தியாவின் மதுரை காமராஐர் பல்கலைக்கழகம் இதய நிறைவு தியான அமைப்பு சிறிராமச்சந்த்ர மிஸன் ஆகியன இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஒத்துழைப்புடன் உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்துகின்றது.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் கி.விசாகரூபன் தலைமையில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

மாநாடு இடம்பெறும் கலையரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைகளுக்கு யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி போராசிரியர் க.கந்தசாமி மற்றும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி க.சுதாகர் ஆகியோர் வணக்கம் செலுத்தினர். 

நிகழ்வில் விருந்தினர் உரைகளும் இடம்பெற்று விருது வழங்கலும் இடம்பெற்றது. நிகழ்வில் விருந்தினர்களாக யாழிலுள்ள இந்தியத் துணைத்தூதுவர் கே.பாலச்சந்திரன் மற்றும் யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி கந்தசாமி உட்பட வெளிநாடுகளில் இருந்த வந்திருந்த பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் மாநாட்டில் இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த பல பேராளர்கள் முனைவர்கள் உட்பட யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராளர்கள் முனைவர்கள் மாணவர்கள் ஆர்வலர்கள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த மாநாடு இன்றும் நாளையும் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் மாநாடு ஆரம்பமாகியது. இதன் போது திருக்குறள் பரதநாட்டிய வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. இதன் பின்னர் நிகழ்வின் வரவேற்புரையை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரீ.கணேசலிங்கம், இலண்டன் கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் சிவா பிள்ளை ஆகியோர் நிகழ்த்தினர்.

இதன் பின்னர் ஆசியுரையை தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி nஐபநேசனும், யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் கலாநிதி சொஞ்செற்செல்வர் ஆறு திருமுகன், அவுஸ்ரேலியா மெல்போர்ன் தமிழ்ச் சங்க ஆலோசகர் ம.nஐயராம சர்மா ஆகியோரும் நிகழ்த்த தலைமையுரையை தமிழ்த்துறைத் தலைவர் கி.விசாகரூபனும், நோக்க உரையை தமிழ்த் தாய் அறக்கட்டளை பொதுச் செயலாளர் உடையார் கோவில் குணா ஆகியோரும் நிகழ்த்தினர். 


No comments