தமிழ் மக்கள் தலையில் கட்டியடிப்பு?


யாழில் சர்ச்சைக்குரிய 28 ஆயிரம் கொங்கிறீட் நிரந்தர வீட்டுத்திட்டம் இன்று அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடங்களாக மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலம்புரி முகாம்களில் தமது வாழ்க்கையினை தொடரும் மக்களிற்கே சர்ச்சைக்குரிய வீடமைப்பு திட்டம் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் - மயிலிட்டி பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இவ் வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடந்திருந்தது.

போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பத்தில் 28 ஆயிரம் கொங்கிறீட் நிரந்தர வீடுகள் மற்றும் பயனாளிகளால் அமைக்கப்படும் நிரந்தர வீடுகள் ஆகியன உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்திலான வீட்டுத் திட்டத்தில் கொன்கிறீட் தகடுகளைக் கொண்டு நவீன முறையில் 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபா செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் மலையகத்திலும் வடகிழக்கிலும் முன்னைய ஆட்சி காலத்திலும் இதே வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

No comments