விடுதலையானார் டொனால் ட்ரம்ப்

அமெரிக்க செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தமக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை முறியடித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் மீது நடவடிக்கை எடுக்க உக்ரைன் அரசுக்கு அழுத்தம் கொடுத்த டிரம்ப்பின் செயல் செனட் சபை உறுப்பினர்கள் பலரையும் சங்கடத்தில் ஆழ்த்திய போதும் பதவி நீக்க கோரும் இரண்டு தீர்மானங்களின் இறுதி வாக்களிப்பில் 52 – 48, 53 – 47 என்ற எண்ணிக்கையில் டிரம்ப் வென்றார்.
இதன் மூலம் பலமாதங்களாக டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை டிரம்ப் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments