தரையிறங்கும்போது மூன்றாக உடைந்து நொருங்கிய பயணிகள் வானூர்தி!

துருக்கியில்  பயணிகள் ஜெட் வானூர்தி ஒன்று புதன்கிழமை பிற்பகல் இஸ்தான்புல்லின் சபிஹா கோகீன் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையில் இருந்து வெளியேறியபோது விபத்துக்குள்ளானதில் போயிங் 737-800 ரக வானூர்தி  மூன்றாக உடைந்து தீ பிடித்தது எரிந்தது.

வானூர்தி நிலையத்தில் விபத்து  நடந்ததினால் உடனேயே தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரசேவைப் பிரிவினர்  சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானத்தில் 171 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்தனர் என்று போக்குவரத்து அமைச்சர் காஹித் துர்ஹான் தெரிவித்தார். இறுதி தகவலின் படி மூவர் பலியாகியுள்ளதோடு 157 பயணிகள் காயமடைந்தனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments