துப்பாக்கியுடன் கைதான இருவர்?

மட்டக்களப்பு - கொக்குக்குஞ்சிமடு பிரதேசத்தில் இரண்டு கட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கரடியனாறு பொலிஸாரினால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ சமரகோன் தெரிவித்துள்ளார்.

No comments