மட்டுவில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று (14) கரை ஒதுங்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் சடலம் வேறு பகுதியில் இருந்து கல்மடு கடற்கரைக்கு அலைகள் மூலம் கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும், குறித்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் கல்குடா பொலிஸாருடன் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கிராம அதிகாரி க.கிருஷ்னகாந்த் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த வயோதிப பெண்ணின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments