கொரோனா வைரஸ்! ஐரோப்பாவில் முதல் மரணம் பிரான்சில்!

கொரோனா வைரல் நோயின் தொற்றுக்கு உட்பட்ட சீனச் சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளார். இம்மரணம் ஆசியாவுக்கு

வெளியேயும் ஐரோப்பாவில் முதல் மரணமாகவும் அமைந்துள்ளது.

உயிரிழந்தவர் சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 80 வயதான நபர் என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சர் அக்னஸ் புசின் தெரிவித்துள்ளார்.

சனவரி 16 ஆம் திகதி பிரான்சுக்கு சுற்றுலாப் பயணியாக வந்த இவர் சனவரி 25 ஆம் திகதி இந்நோயினால் பாதிக்கப்பட்டு பாரிஸில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு வழங்கி வந்த சிகிற்சைகள் பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரசினால் சீனாவிற்கு வெளியே ஹொங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் ஏற்கனவே ஒருவர் வீதம் மூவர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரத்தின் படி சீனாவில் 1,500 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் இறந்துள்ளனர் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments