பழிவாங்கல் முறைப்பாடளிக்கும் காலம் நீடிப்பு!

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் திகதியை மார்ச் மாதம் 6ம் திகதி வரை நீடிப்பதற்கு குறித்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக எதிர்ப்பார்த்திருக்கும் பலரின் வேண்டுகோளை கவனத்தில் எடுத்தே இதன் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதென, இந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

No comments