பெரும்பான்மை பெறும் நம்பிக்கை உண்டு!

உள்ளுராட்சி சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் போன்று நாடாளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறும் என இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.

கொத்மலை பகுதியில் இன்று (21) நடைபெற்ற சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

அடுத்த பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதே எமது எதிர்பார்ப்பாகும். இந்நிலையில், உள்ளாட்சி மற்றும் ஜனாதிபதி தேர்தல்போல் நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் அமோக ஆணையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - என்றார்.

No comments