கைவிரித்த அமெரிக்க தூதுவர்

இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை தனது ஆட்சேபனையை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரிடம் இன்று (16) வெளிப்படுத்தியுள்ளது.

வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை அமெரிக்கத் தூதுவரிடம் எடுத்துரைத்தார்.

ஆனாலும் "இந்த விடயம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முடிவென்றும், இலங்கையின் நிலைப்பாடு குறித்து எமது இராஜதந்திரிகளிடம் தெரிவிப்பதாக" இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லைஸ்ட் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யுத்தக்குற்றத்தை காரணம் காட்டி எம்சிசி எனப்படும் மிலேனியம் ஒப்பந்தத்ததை கைச்சாத்திடும் நோக்கிலேயே இந்த தடை விதிக்கப்பட்டதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments