அரச அதிபர்கள் தூக்கியடிப்பு:பின்னாலே அங்கயன்


யாழ்.அரச அதிபரை ஓய்வின் முன்னதாக தூக்கியடித்த விவகாரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் மற்றும் அவரது சித்தப்பாவான தொழிலதிபர் ஒருவர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுநிர்வாக விவகார அமைச்சரிற்கு இடமாற்ற அழுத்ததத்தை இத்தரப்பே வழங்கியதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே அரச அமைச்சர் டக்ளஸிற்கு இதனை சில தரப்புக்கள் கொண்டு சென்ற போது அவர் கூட்டமைப்பு ஆள்தானேயென விளமளித்ததால் சென்றவர்கள் அதிர்ந்து திரும்பியுள்ளனர்.
இதனிடையே திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரம் 1 ஐ சேர்ந்த ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தமது கடமைகளை இன்று மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்க முன்னர் கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், கடற்றொழில் மற்றும் மீன்பிடி அமைச்சின் மேலதிக செயலாளர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகிய பதவிகளையும் வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. அருந்தவராஜா,கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments